Advertisment

சீக்கிரம் உலகம் அழியப்போகிறது?

2012

மாயன் காலண்டரில் சொல்லப்பட்டவை அனைத்தும், நிஜமாக இந்த உலகில் நடந்து வருகிறது. ஆனால், மாயன் காலண்டரோ 2012க்கு அடுத்து எதுவும் சொல்லப்படவில்லை அதனால் இந்த உலகம் 2012க்கு பின் அழிந்துவிடும் என்றெல்லாம் ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. அதை வைத்து 2012ல் உலகம் அழிந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ஹாலிவுட் படமும் எடுக்கப்பட்டு, மக்கள் அனைவரையும் அச்சப்படுத்தியது. மாயன் காலண்டரில் சொல்லப்பட்டதுபோல் 2012ல் இந்த உலகம் அழியாது என்று அப்போது பல அறிவியலாளர்கள் சொன்னார்கள். ஆனால், இந்த உலகம் அழியும், அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் இந்த உலகில் வாழும் மனிதர்களாகிய நாம்தான் என்றனர். இந்த பூமியில் உள்ள இயற்கையை, நவீனம் என்ற பெயரில் மனிதர்கள் அழித்து வருகிறார்கள். அதுதான் இந்த உலகை அழிக்க காரணமாக அமையும் என்று பல ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கிறது. தற்போது சீக்கிரம் இந்த உலகம் அழியப் போகிறது என்று அறிவியலாளர்கள் ஒரு ஆய்வில் எச்சரித்துள்ளனர்.

Advertisment

நினைத்ததை விட அதிக வேகத்தில் கடல் நீர் வெப்பம் அதிகரிக்கிறது என அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதிலும் இருக்கும் வெவ்வேறு கடல் பரப்பில் மூன்றாயிரத்தி தொல்லாயிரம் மிதவைகள் உதவியோடு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ச்சியாக ஆய்வு செய்ததில் 1971 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை கடலில் 2000மீட்டர் ஆழத்தில் 0.1 டிகீரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்கள் குளிரான இடங்களை தேடி இடம்பெயர்கின்றன. கடல் நீரில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, கடல் நீரில் ஆக்சிஜன் குறைந்துகொண்டே வருகிறது. இது பவள பாறைகளையும், கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வையும் கடுமையாக பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனுடன் வெப்பமான கடல் பரப்பிலிருந்து வெளியேரும் ஈரத்தன்மை, சக்தி வாய்ந்த புயல்களை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற பல காரணங்களால் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகன எரிபொருளுக்கு மாற வேண்டும் என்றும் அறிவுருத்தியுள்ளனர்.

Advertisment

world world end
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe