ADVERTISEMENT

ஜெர்மனியில் ஐந்து இருக்கைகள் கொண்ட பறக்கும் கார் சோதனை வெற்றி!

01:40 PM May 17, 2019 | santhoshb@nakk…

உலகில் உள்ள வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பு. அதனால் நாளுக்கு நாள் ஏற்படும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு, வாகனப் போக்குவரத்து நெரிசல் தற்போது முக்கிய பிரச்சனைகளாக மாறியுள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சுழல் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏர்டாக்ஸி வகை காரை கையில் எடுத்துள்ளனர். மேலும் அதற்கான வழிமுறைகளையும் வகுத்து வருகின்றனர். இத்தகைய ஏர்டாக்ஸி குறைந்த தூரத்தில் மட்டுமே இயக்க அனுமதித் தர அமெரிக்கா போன்ற நாடுகள் கொள்கை முடிவுகளை எடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதன் ஒரு படியாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏர்டாக்ஸி (AIR TAXI) நிறுவனமான 'வில்லியம் நிறுவனம்' 2025 ஆம் ஆண்டிற்குள் உலக முழுவதும் ஏர்டாக்ஸியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் பறக்கும் வகை காரை தயாரித்து வருகிறது. இதில் முதற்கட்டமாக ஐந்து பேர் பயணம் மேற்கொள்ளும் வகையிலும், சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையிலும், பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை வெற்றிக்கரமாக சோதனை செய்துள்ளது .இந்த பறக்கும் கார் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் என வில்லியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பறக்கும் வகை காரின் பெயர் 'வில்லியம் ஜெட்' ஆகும். அடுத்த வருடம் இந்த கார் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT