தண்ணீருக்குப்பயந்து60 வருடத்துக்கு மேல் குளிக்காமல் இருந்த உலகின் அழுக்கான மனிதர்திடீரென உயிரிழந்த சம்பவம்சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரான் நாட்டின் தெற்கு மாகாணத்தில் பார்சில் என்னும் பகுதியில் தேஜ்கா என்ற ஒரு சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அமாவு ஹாஜி என்பவர் வசித்து வந்தார். இவர், தண்ணீருக்குப் பயந்தும்எங்க நாம குளித்து தூய்மையாக இருந்துவிட்டால் ஏதாவது நோய் வந்துவிடும் என்ற காரணத்தினாலும்பல ஆண்டுகளாகக் குளிக்காமலே வாழ்ந்து வந்துள்ளார். அதாவது 60 வருடத்துக்கும் மேலாக குளிக்காமல் இருந்த அமாவு ஹாஜிஉலகின் அழுக்கு மனிதர் என்றும் பெயர் எடுத்தார். இதனாலேயே, அந்த ஊர் மக்கள்அமாவு ஹாஜியைத்தனிமைப்படுத்தி இருக்கின்றனர்.
மேலும், சூடான உணவு சாப்பிட்டால் நோய் வந்துவிடும் என்ற பயத்தில்பாலைவனத்தில் இருக்கிற அழுகிய முள்ளம்பன்றிகளைச் சாப்பிட்டு வந்துள்ளார். ஆரோக்கியமாக இருப்பதற்காக தினமும் 5 லிட்டர் தண்ணீரைத்துருப்பிடித்த இரும்பு கேனில் குடித்து வந்துள்ளார். அமாவு ஹாஜிக்குபுகைபிடிக்கும் பழக்கம் இருப்பதால்மாட்டுச்சாணத்தில் செய்த சிகரெட்டுகளை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டுஅமாவு ஹாஜி குறித்து 'THE STRANGER LIFE OF AMOU HAJI' என்ற ஆவணப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.
இதைப் பார்த்த தேஜ்கா கிராம மக்கள்அமாவு ஹாஜியின் வாழ்க்கைபோக்கை மாற்றவும்அவரைகுளிக்க வைக்கவும் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளனர். ஆனால், அது முடியாத காரணத்தினால்சில மாதங்களுக்கு முன்புமீண்டும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமாவு ஹாஜியை குளிக்க வைத்துள்ளனர். இந்த தகவலை ஈரான் நாட்டு உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்டு இருந்தது.
இதனையடுத்து, 60 ஆண்டுகளுக்கு மேல் குளிக்காமல்நல்ல உணவைச் சாப்பிடாமல் வாழ்ந்து வந்த அமாவு ஹாஜி, அவர் குளித்த ஒரு சில மாதங்களிலேயே உயிரிழந்துள்ளார். கடந்த அக்டோபர் 23 ஆம் தேதியன்று, அமாவு ஹாஜிஅவரது 94 வயதில் உயிரிழந்தார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இந்த தகவல்சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகிறது.