Advertisment

இந்தியாவிற்கு கைகொடுக்க முன்வரும் உலக நாடுகள்!

china - france

இந்தியாவில் கரோனாபரவல் தீவிரமடைந்து வருகிறது. தினசரி 3 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுவதுடன், கரோனாவால்பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும்,மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வெளியே காத்துக்கிடக்கும்அவலமும்அரங்கேறி வருகிறது.

Advertisment

இந்தநிலையில், கரோனாவிற்குஎதிரான போரில், இந்தியாவிற்கு உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. இதுதொடர்பாகபிரான்ஸ் அதிபர்இம்மானுவேல் மக்ரோன், "மீண்டும் எழுந்துள்ள கரோனாஅலையின் எழுச்சியை எதிர்கொண்டு வரும் இந்திய மக்களுக்கு, ஒற்றுமைக்கான செய்தியைஅனுப்ப விரும்புகிறேன். யாரையும் விட்டுவைக்காதஇந்தப் போராட்டத்தில், பிரான்ஸ் உங்களுடன் (இந்தியர்களுக்கு) இருக்கிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயராகஇருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தியாவிற்கு உதவ சீனாவும் முன்வந்துள்ளது. மேலும், இதுதொடர்பாக இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் சீனாதெரிவித்துள்ளது. "தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில்சீன அரசாங்கமும்மக்களும், இந்திய அரசாங்கத்தையும்இந்திய மக்களையும் உறுதியாக ஆதரிக்கின்றனர். மேலும், இந்தியத் தரப்பின் தேவைகளுக்கு ஏற்ப ஆதரவையும் உதவிகளையும் வழங்க தயாராக உள்ளனர். இதுதொடர்பாகசீனதரப்பு, இந்திய தரப்புடன் தொடர்பில் இருந்து வருகிறது" என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ad

“புதிய கரோனாஅலையை எதிர்கொள்ளும் இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு, ஆஸ்திரேலியா ஒற்றுமையைதெரிவிக்கிறது. எங்கள் பிராந்தியத்திற்கு தடுப்பூசி வழங்கிய இந்தியாவின் தலைமைத்துவமும், பெருந்தன்மையும் பாராட்டத்தக்கது” எனக் கூறியுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர், கரோனாதொற்றை தோற்கடிக்க, இந்தியாவுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகதெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனாபரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவிற்குபாகிஸ்தான் உதவ வேண்டுமெனபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தானியர்கள் ட்விட்டர் வழியாக கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்தநிலையில்இம்ரான் கான், "கரோனாவின் ஆபத்தான அலையை, எதிர்த்துப் போராடி வரும் இந்திய மக்களுக்கு ஆதரவைவெளிப்படுத்த விரும்புகிறேன். நமது அண்டை நாட்டிலும், உலகம் முழுவதிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமாக பிரார்த்திக்கிறோம். மனித குலத்திற்கு எதிரான இந்த உலகளாவிய சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராட வேண்டும்" என கூறியுள்ளார்.

Australia france china Pakistan India corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe