india representative to un

Advertisment

ஆப்கானிஸ்தானைதலிபான்கள்கைப்பற்றியுள்ள நிலையில், அந்தநாட்டில்பல்வேறுவன்முறைச்சம்பவங்களும்மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான உரிமைகளும்மறுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும்அதனைப்பாதுகாத்தல் என்ற தலைப்பில் ஐநா மனித உரிமைகள்கவுன்சிலின்31-வதுசிறப்பு அமர்வின்முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த சிறப்பு அமர்வில் பேசியஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திர மணிபாண்டே, ஆப்கான் பெண்களின் குரல்களும், சிறுபான்மையினரின் உரிமைகளும் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும்எனத்தெரிவித்துள்ளார்.

ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திர மணிபாண்டேமனித உரிமைகள்கவுன்சிலில்பேசியது வருமாறு:

Advertisment

ஆப்கானிஸ்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து அனைவரும்கவலை கொண்டுள்ளோம். ஆப்கானிஸ்தான் மக்கள், கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை மதிக்கப்படுமா என்றுகவலைகொண்டுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானுடனானஎங்களது பல்லாயிரம்ஆண்டுக்காலநட்பு, மக்களிடையேயானஉறவு என்ற வலுவான தூணில் அமைந்துள்ளது.இந்தியா எப்போதும் அமைதியான, வளமான மற்றும் முன்னேறும் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள எங்களது நண்பர்களின் அபிலாஷைகள் நிறைவேறுவதற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. ஆப்கான் பெண்களின் குரல்களும், சிறுபான்மையினரின் உரிமைகளும், குழந்தைகளின் ஆசைகளும் மதிக்கப்பட வேண்டும்.

நாம் ஒரு சர்வதேச சமூகமாக, ஆப்கானிஸ்தான் மக்களின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முழு ஆதரவைஉறுதி செய்ய வேண்டும். பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து ஆப்கான் மக்களும்அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழ வழிவகுக்க வேண்டும்.

Advertisment

ஆப்கானிஸ்தானின் நிலைமை அண்டைநாடுகளுக்குச்சவாலாக இருக்காது என்றும், ஆப்கான்நிலப்பரப்பைஜெய்ஷ்இ-முகமது,லஷ்கர்-இ-தொய்பாபோன்ற பயங்கரவாத இயக்கங்கள் வேறு எந்த நாட்டையும்அச்சுறுத்தப்பயன்படுத்தாது என்றும்நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு இந்திர மணிபாண்டேகூறினார்.