ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக் கொண்டு தோன்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு அமலுக்கு வந்துள்ளது.
பெண்கள் தலை முதல் கால் வரையிலான புர்காவை அணிய வேண்டும் என்று தலிபான்கள் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதனையேற்று, தொலைக்காட்சிகளில் திரையில் தோன்றும் பெண்கள் முகங்களை மூடிக் கொண்டு செய்தி வாசிப்பிலும், தொகுத்து வழங்குவதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், ஆண் துணையின்றி பெண்கள் பொதுவெளியில் செல்லக் கூடாது போன்ற பல்வேறு உத்தரவுகளை அமல்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.