Skip to main content

47 வருடங்களுக்கு பின் 7,800 கி.மீ அப்பால் உள்ள நாட்டில் கிடைத்த மோதிரம்!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

டெப்ரா மெக்கென்னா என்பவர் 1973ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் தனது காதலன் நியாபமாக வைத்துக்கொள்ள கொடுத்த மோதிரத்தை தொலைத்துவிட்டார்.  கிட்டத்தட்ட 50 வருடங்கள் நெருங்கிய பின் அமெரிக்கா நாட்டில் தொலைந்த மோதிரம் ஃபின்லாந்தில் கிடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஃபின்லாந்திற்கும் கிட்டத்தட்ட 7,800 கிமீ தொலைவு. 
 

rings

 

 

மார்கோ சாரினென் என்ற இரும்பு வேலை பார்ப்பவர் ஃபின்லாந்தில் காட்டுப்பகுதியில் மெட்டல் கண்டறியும் கருவியை வைத்து தேடிக்கொண்டிருக்கும்போது இந்த மோதிரத்தை 8 இன்ச் ஆழத்தில் கண்டுபிடித்துள்ளார். மேலும் அந்த மோதிரத்தில் ‘மோரிஸ்  உயர் கல்வி’ என்றும் 1973 ஆம் வருடம் போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததை வைத்து ஷான் என்பவருடை மோதிரம் இது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஷான் தன்னுடைய கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது கல்லூரியில் கொடுத்த மோதிரத்தை காதலி டெப்ராவுக்கு பரிசாய் கொடுத்திருக்கிறார். அவர் அதை ஷாப்பிங் செல்லும்போது தொலைத்திருக்கிறார். அதன்பின் அவர் ஷானை தான் திருமணம் செய்துகொண்டு நாற்பது வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஷான் இறந்துவிட்டார். 

மோதிரத்தை கண்டறிந்தவர் இத்தனை விஷயங்களை அறிந்து டெப்ராவுக்கு கொரியரின் மூலம் அனுப்பியிருக்கிறார். மோதிரத்தை பார்த்த டெப்ரா இத்தனை வருடங்கள் கழித்து தனது கணவர் கொடுத்த பரிசு கிடைத்திருக்கிறது என்று ஆனந்த கண்ணீர் சிந்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்