Advertisment

தன் இதயத்தை தானே கண்ட பெண்; இங்கிலாந்தில் சுவாரசியம்

The woman who found her own heart; Interesting in England

Advertisment

இங்கிலாந்தில் உள்ள பெண் ஒருவர், 16 ஆண்டுகளுக்கு முன்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் தன் உடலில் இருந்து அகற்றப்பட்டதன் இதயத்தைஅருங்காட்சியகத்தில்பார்வையிட்டார்.

ஜெனிஃபர் சுட்டன் என்ற பெண் லண்டன் ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட் பகுதியைச்சேர்ந்தவர். 22 வயதாக இருந்தபோது சுட்டன் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மலைகளில் நடப்பது போன்ற உடற்பயிற்சிகளை செய்வதில் தனக்கு சிரமம் இருப்பதை உணர்ந்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதனை செய்த அவருக்கு ரெஸ்டிரிக்டிவ் கார்டியோமயோபதி நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நோய், உடல் முழுவதற்கான ரத்தத்தை வெளியேற்றும் இதயத்தின் திறனை குறைக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு நோயாகும். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை எனில் சுட்டன் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து இதய மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்கான காத்திருப்புப் பட்டியலில் இணைந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தனது ரத்த மாதிரியை கொண்ட நன்கொடையாளர் ஒருவரிடம் இருந்து இதயம் பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

Advertisment

The woman who found her own heart; Interesting in England

தொடர்ந்து உடல் நலம் தேறிய சுட்டன், ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் தனது இதயத்தை ஒரு காட்சிக்கு பயன்படுத்த அனுமதித்தார். அந்த இதயம் இப்போது ஹோல்போர்னில் உள்ள அருங்காட்சியகத்தில் அது அனைவருக்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது 38 வயதாகும் சுட்டன், 16 வருடங்கள் முன் எடுக்கப்பட்ட தனது இதயத்தை அருங்காட்சியகத்தில் மீண்டும் கண்டுள்ளார். இது குறித்து கூறுகையில்,உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். நான் நம்ப முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறேன்.சுறுசுறுப்பாக இருக்கிறேன். இந்த இதயத்தை முடிந்தவரை ஆரோக்கியமாக வைத்திருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

England heart
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe