குவைத்தில் சாலையில் சுற்றித்திரியும் சிங்கக்குட்டியை இளம்பெண் ஒருவர்குழந்தை போலத் தூக்கிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குவைத் நாட்டின் சபாஹியா பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த சிங்கக்குட்டி ஒன்று தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து, சிங்கத்தின் உரிமையாளர் காவல்துறையினரின் உதவியுடன் தேடி சிங்கக்குட்டியைக் கண்டுபிடித்துள்ளார். குழந்தையைப் போல சிங்கக்குட்டி அடம் பிடித்த நிலையில், அதையும்மீறி அந்த பெண் சிங்கக்குட்டியைத் தூக்கி சென்றுள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.