கொலம்பியாவின் எல்டோரடா விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் பெண் ஒருவர் சரியாக நடக்க முடியாமல் வந்துள்ளார். அவரை விமான நிலைய அதிகாரிகள் விசாரித்த போது தனது காலில் அடிபட்டதால் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் மீது சந்தேகம் வரவே அதிகாரிகள் அவரை ஸ்கேன் பண்ணி பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அவரது தொடையில் தையல் போட்ட பகுதியின் உள் மேல் சதைக்குக் கீழ்ப்புறம் பிளாஸ்டிக் கவர் போன்ற ஒரு பொருள் இருந்துள்ளது. அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அறுவை சிகிச்சை செய்து அந்தப் பொருளை எடுத்தபோது அது திரவ வடிவிலான போதைபொருள் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இதன் பின்னணியில் இருப்பவர்கள் என்பது குறித்துப் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.