Advertisment

மானை வீட்டுக்கு அழைத்து வந்து உணவு கொடுத்த பெண்... அபராதம் விதித்த வனத்துறையினர்!

அமெரிக்காவில் காட்டு மான்களை வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுத்த பெண்ணுக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கொலார்டோ மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் காட்டில் சுற்றித்திரிந்த மான் ஒன்றை வீட்டிற்கு அழைத்து வந்து பிரெட், பழங்கள் கொடுத்துள்ளார். மேலும் மான் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்து அது அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடும் வரை அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை அழைத்து எச்சரிக்கை செய்ததுடன் ஆயிரம் டாலர் அபராதம் விதித்தனர். மான் வீட்டிற்கு வந்து உணவுப்பொருட்களை சாப்பிடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

deer
இதையும் படியுங்கள்
Subscribe