Advertisment

விண்டோஸ் மென்பொருள் முடங்கியது!

Windows software error

Advertisment

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத்துறை, வங்கி, விமானம், ரயில், மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) என்ற அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் விண்டோஸை புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ப்ளு ஸ்கிரின் எரர் ( Blue Screen Error) ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உலகம் முழுவதும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விமான சேவைகள் தாமதமாகும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உலகளாவிய விண்டோஸ் செயலிழப்பு தொடர்பாக மைக்ரோசாப்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளது. இந்த செயலிழப்புக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

India microsoft software windows
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe