Skip to main content

மனிதர்களை தாக்குமா ஜாம்பி நோய்... ஆராய்ச்சியாளர்களின் புதிய தகவல்!

Published on 10/04/2022 | Edited on 10/04/2022

 

Will zombie attack humans ... New information from researchers!

 

கனடாவில் மான்களை தாக்கும் 'ஜாம்பி வைரஸ்' என அழைக்கப்படும் ஒரு வகை நோய் பரவி வரும் நிலையில், இந்த நோயினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெற்றது. ஆராய்ச்சியில் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுவதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மான் வகைகளை மட்டும் குறிவைத்து இந்த நோய் தாக்கும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை. இந்தநோயால் பாதிக்கப்பட்ட மானின் மூளை கட்டுப்பாட்டை இழக்கும், அதேபோல அதிக உமிழ்நீர் சுரப்பு, எடை இழப்பு போன்றவை இந்த ஜாம்பி நோயின் அறிகுறிகள்  என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. ஜாம்பி நோயால் பாதிக்கப்பட்ட மான் இறைச்சியை உண்பவர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தைப் போலவே கனடாவிலும் அமல்படுத்தப்பட்ட திட்டம்; குவியும் பாராட்டுகள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Similar to Tamil Nadu, Canada also provides breakfast to students

கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய பள்ளி உணவு திட்டத்தை அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”குழந்தைகள் நன்கு கற்க வேண்டும் என்றால், முதலில் அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

கனடாவில் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் தேசிய பள்ளி உணவுத் திட்டம் சேர்க்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டிருந்தார். அதன்படி அரசாங்கத்தின் பட்ஜெட் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் அமைச்சர் ஜென்னா சுட்ஸ் ஆகியோருடன் ஜஸ்டின் ட்ரூடோ 2 ஆம் தேதி டொராண்டோவில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு நான்கு லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தேசிய உணவு திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பள்ளிக் கல்வியானது கூட்டாட்சி அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றாலும், மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூட்டு சேர்வதற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கனடா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், அவர்கள் கற்றுக்கொள்ளவும், வளரவும், அவர்களின் முழு திறனை அடையவும் இந்த மதிய உணவு திட்டம் உதவுகிறது. இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு தலைமுறை முதலீடாகும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்குத் தேவையான உணவு இருப்பதை உறுதிசெய்ய, மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் மற்றும் பழங்குடியின மக்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம். குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் ஒரு பாதுகாப்பு வலையாக இருக்கும். உணவுக்கான அணுகல் பற்றாக்குறை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் இன மற்றும் பழங்குடி சமூகங்களின் குழந்தைகளை விகிதாச்சாரமாக பாதிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், வளரும் குழந்தைகளின் தட்டுகளில் ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.

Similar to Tamil Nadu, Canada also provides breakfast to students

புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினர் தங்கள் தற்போதைய பள்ளி உணவுத் திட்டங்களை விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் அதிகமான குழந்தைகள் தங்களுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் உதவும். இந்தத் திட்டம் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது, பொருளாதாரத்திற்கும் நல்லது. இது குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் அதே வேளையில், குடும்பங்களின் அழுத்தத்தைக் குறைத்து, நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் நேரடியாக முதலீடு செய்ய உதவும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க, கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் நோவா ஸ்கோடியா ஆகிய நாடுகளில் உள்ள பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  கனடா அரசாங்கம் நீண்ட காலமாக இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு திட்டமிட்டு வந்தது. அதன்படி, இந்தத் திட்டம் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கனடா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இந்தச் செய்தியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதில், இது போன்று உணவு திட்டங்கள் கொண்டு வருவதில் இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகிற்கே தமிழ்நாடு முன் மாதிரி என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சிலர் திராவிட மாடல் என்பது இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் பாலோ செய்ய மட்டும் அல்ல. உலகிற்கே வழி காட்டுவது எனவும் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் மதிய உணவு மட்டுமல்லாது காலை உணவும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'சிங்கப்பூரில் பரவும் உருமாறிய கொரோனா தொற்று' -அமைச்சர் மா.சு பேட்டி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
'Transformed corona infection spreading in Singapore' - Minister M. Su interview

தமிழகத்தில் புதிய வகை வைரஸ் தாக்குதல் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நேற்றிலிருந்து தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், வேளச்சேரியில் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களுக்கு அரை கிலோ ப்ளீச்சிங் பவுடர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''வீடுகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சம்ப் என்று சொல்லக்கூடிய அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் போன்ற நீர்நிலைகளை தூய்மைப்படுத்தி ,ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நடத்தப்படுகின்ற மருத்துவ முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைப்படுபவர்களுக்கு அனைவருக்கும் 1/2 கிலோ ப்ளீச்சிங் பவுடரும் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கொரோனா என்பது 2019 இறுதியில் தொடங்கி பல்வேறு வகைகளில், உருமாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தது. தமிழ்நாட்டை பொருத்தவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு வசதியாக 98 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு மூன்று தடுப்பூசியை போட்டு இன்று தமிழக மக்கள் இடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாற்றம் என்பது தொடர்ச்சியாக பல வழிகளில் வந்து கொண்டிருக்கிறது.

கொரோனா என்றும்; ஆல்பா  என்றும்; பீட்டா என்றும்; டெல்டா என்றும்; டெல்டா பிளஸ் என்றும்; ஒமிக்கிரான் என்றும் கூட பல்வேறு வகைகளில் இந்த ஒரு மாற்றங்கள் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிங்கப்பூரில் நிறைய பேருக்கு ஒரு மாதிரியான கொரோனா தொற்று பரவல் இருப்பது அறியப்பட்டது. உடனடியாக சிங்கப்பூரில் இருக்கக்கூடிய 'நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்' அமைப்பில் பணியாற்றுகின்ற மருத்துவர்களோடு நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது எந்த வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களிடம் கேட்டபோது, அவர்கள், ஒரு பாசிட்டிவான நோயாளிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் நெகட்டிவ் ஆகிவிடுகிறது, இது இருமல் மற்றும் சளி ஆகிய இரு உபாதைகளை மட்டுமே கொடுக்கிறது என்கின்ற வகையில் அவர்கள் நேற்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றார்.