Advertisment

சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை பெற்ற வில் ஸ்மித்!

Will Smith wins Oscar for Best Actor

Advertisment

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட 6 விருதுகளை டியூன் திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித் பெற்றுள்ளார். இந்த படம் வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றுள்ளார். சிறந்த இயக்குநருக்கான விருதை 'தி பவர் ஆஃப் தி டாக்' என்ற படத்திற்காக ஜேன் கேம்பியன் பெற்றுள்ளார். சிறந்த பாடலுக்கான விருதை ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை' பெற்றுள்ளது. இதற்கான ஆஸ்கர் விருதை பில்லி எலீஸ், ஃபின்னியாஸ் ஓகானல் பெற்றுள்ளனர்.

Award
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe