அதிகரிக்கும் பதற்றம்;  "தீர்க்கமான பதிலடி கொடுப்போம்" - புதினை எச்சரித்த ஜோ பைடன்!

joe biden

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. இந்தநிலையில்கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமைப்பு செய்து, அதை தன்னுடன் இணைத்து கொண்டது. மேலும் ரஷ்யஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அந்தநாட்டின்டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர்.

இந்தநிலையில்தற்போது ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இதனையொட்டி ஜனவரி மாதத்தில் ரஷ்யா தங்கள் மீது படையெடுக்கலாம்என உக்ரைன் கருதுகிறது. அதேநேரத்தில்ரஷ்யா இதனைதொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே உக்ரைன் மீது படையெடுத்தால், பதிலடி அளிப்போம் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது.

இந்தநிலையில்அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்யஅதிபர் புதினும் ஒரு மணிநேரம் தொலைபேசியில் பேசியுள்ளனர். புதின் விருப்பத்தின் பேரில் இந்த உரையாடல் நடந்துள்ளது. இந்த உரையாடலின்போதுஅமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுடனான பதட்டத்தை தனிகுமாறுபுதினிடம் அறிவுறுத்தியுள்ளார். மேலும்ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமான பதிலடியை கொடுக்கும் எனவும் புதினை பைடன் எச்சரித்துள்ளார்.அதேநேரத்தில்புதின், ரஷ்யாமீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கும் இடையேயானஉறவு முற்றிலுமாகமுறிந்துவிடும் என கூறியுள்ளார்.

ரஷ்யா தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையைபரிசோதித்துபதற்றத்தை அதிகரித்த நிலையில், இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Russia
இதையும் படியுங்கள்
Subscribe