பிரான்ஸில் நடைபயிற்சிக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணை கடித்துக்குதறி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

wild dogs

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள வில்லர் கோட்டேரெட்ஸ் நகரை சேர்ந்த 29 வயதான கர்ப்பிணி பெண், எலியாஸ் பிலார்ஸ்கி. அங்குள்ள வனப்பகுதியில் தான் வளர்த்து வந்த ஐந்து செல்லப்பிராணி நாய்களுடன் நடைபயிற்சிக்கு சென்றார்.

அப்போது, வேட்டைக்காரர்கள் வேட்டைக்காக பயன்படுத்தும் வேட்டை நாய்கள் அவரை சூழ்ந்து பயமுறுத்தியுள்ளன. உடனடியாக செய்வதறியாது தனது கணவருக்கு கால் செய்து சம்பவத்தை கூறியிருக்கிறார். சம்பவ இடத்திற்கு கணவர் விரைந்து சென்றுள்ளார். ஆனால், அவர் வருவதற்குள்ளே கர்ப்பிணியை வேட்டை நாய்கள் கடித்துக்குதறி கொன்றுவிட்டன. அவரின் வளர்ப்பு நாய்கள் அவரது உடலின் அருகே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தன.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளனர். கர்ப்பிணியை கடித்து கொன்ற நாய்களை கண்டறிவதற்காக இதுவரை 93 நாய்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் அந்த பெண்ணின் வளர்ப்பு நாய்களும் அடங்கும்.