கடந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த போது டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனின் கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களின் ஈ மெயில்களை ஜூலியன் அசாஞ்சே தேர்தலுக்கு முன்னர் வெளியிட்டார். ஹிலாரி கிளின்டன் கட்சி தலைவர்கள் நடத்திய அந்த உரையாடல்கள் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு பொது வெளியில் வெளியிடப்பட்டது. அப்படி இவர் செய்ததனாலேயே டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பு அதிகமானதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

assanje

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இப்படி அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளையே மாற்றியமைத்ததாக கூறப்படும் இவரை ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக குற்றவாளியாக அறிவித்தது அரசு. அதனை தொடர்ந்து அசாஞ்சே ஈக்வடார் நாட்டின் ஆதரவில் லண்டனில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஈக்வடார் நாடு அவருக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொண்டு நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு லண்டன் போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

Advertisment

முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு சுவீடன் அரசு இவர் மீது பாலியல் வழக்கை தொடர்ந்திருந்தது. அதனால் கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்த அச்சாஞ்சே தலைமறைவாகி ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவிற்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்து பிரிட்டிஷ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.