Advertisment

"3 மாதங்களில் 7 லட்சம் மரணங்கள் ஏற்படலாம்" - ஐரோப்பா கரோனா நிலை குறித்து WHO அதிர்ச்சி தகவல்! 

WORLD HEALTH ORGANISATION

ஐரோப்பாவில் கரோனாதொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனையொட்டி கரோனாமரணங்களும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில்உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பாவில் ஒட்டுமொத்தமாக கரோனாவால்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அடுத்தாண்டு மார்ச் 1 ஆம் தேதிக்குள் 22 லட்சமாக அதிகரிக்கலாம்எனக் கூறியுள்ளது.

Advertisment

ஏற்கனவே ஐரோப்பாவில் கரோனாவால்பாதிக்கப்பட்டு 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பாவில் கரோனாவுக்குஎதிரான பாதுகாப்பு குறைவதாகவும், எனவே அதிகம் பாதிக்கப்படவாய்ப்புள்ளவர்கள், 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை கொண்டவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் ஷாட்கள் செலுத்துவதில் முன்னுரிமை வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Advertisment

இன்றைக்கும் மார்ச் 1 ஆம்தேதிக்கும் இடையே, 25 நாடுகளில் மருத்துவமனை படுக்கைகளுக்கு அதிக அல்லது தீவிரமான தட்டுப்பாடு நிலவலாம்என்றும், 49 நாடுகளில் அவசர சிகிச்சைப் பிரிவு மீது அதிக அல்லது தீவிரமான அழுத்தம் நிலவலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

europe world health organization
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe