ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவல்... உலகம் முழுவதும் அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு...

12:13 PM Jan 31, 2020 | kirubahar@nakk…

கரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த கரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். உலகம் முழுவதும் 18 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு நேற்று கரோனா வைரஸ் தொடர்பாக ஒரு சர்வதேச அவசர நிலையை அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பால் மிக அரிதாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பு நோயைக் கையாள்வதில் மேம்பட்ட சர்வதேச ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT