/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sdsds_10.jpg)
கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், எதிர்காலம் நிச்சயமற்று உள்ளதாகவும், இயல்பான எதிர்காலம் கண்களுக்கு தெரியவில்லை எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,32,29,659 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,74,981 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 76,91,451 ஆக உள்ளது. இந்நிலையில் கரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறுகையில், "வைரஸ் பரவல் உலகம் முழுவதும் மிக மோசமாகி வருகிறது, எதிர்காலம் நிச்சயமற்று காணப்படுகிறது. இயல்பு நிலை திரும்புமா என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுக்கிறது. இயல்பான எதிர்காலம் கண்களுக்கு தெரியவில்லை. இந்த சூழலில் அடிப்படைகளைச் சரியாக கடைப்பிடிக்கவில்லையெனில், இந்த கரோனா பெருந்தொற்று ஒரே பாதையில்தான் பயணிக்கும்,அது மோசமான பாதையாகும்" எனதெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)