who chief about covid 19

Advertisment

கோவிட் -19 தொற்றுநோய் புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பலிகொண்டுள்ள கரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. இதுவரை இந்த வைரஸை குணப்படுத்த மருந்து எதுவும் அதிகாரபூர்வமாக கண்டறியப்படாத சூழலில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இதன் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “உலகம் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. பலர் வீட்டில் இருப்பதால் வெறுப்படைந்துள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வைரஸ் இன்னும் வேகமாகப் பரவி வருகிறது. பல நாடுகள் தங்கள் சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளை மீண்டும் திறக்க ஆர்வமாக உள்ளன. ஆனால் வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. உலக நாடுகள் அனைத்தும் மிக, மிக கவனமானவும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான பயணமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.