கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அங்கீகாரம் - உலக சுகாதார நிறுவனம் விரைவில் முடிவு!

covaxin

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியான கோவாக்சின் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில்கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், எளிதாக வெளிநாடு செல்லும் வகையில், கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரத்தை பெற அத்தடுப்பூசியைதயாரிக்கும் பாரத் பையோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்த சூழலில், கோவாக்சின் தடுப்பூசியின் சோதனை தரவுகள் நன்றாக இருப்பதாகவும், டெல்டா வகை கரோனாவிற்கெதிராககோவாக்சினின் செயல்திறன் குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அதன் செயல்திறன் அதிகமாகஇருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் தெரிவித்தார். இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தநிலையில்கோவாக்சினுக்கு அவசர காலஅங்கீகாரம் வழங்குவது குறித்ததனது முடிவினை உலக சுகாதார நிறுவனம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

covaxin world health organaization
இதையும் படியுங்கள்
Subscribe