/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/A3613.jpg)
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில மாதங்களாக நிமோனியா உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாகவும்,அதேசமயம் வயது முதிர்வு காரணமாகவும்சிகிச்சையில் இருந்து வந்தநிலையில் போப் பிரான்சிஸ் கடந்த 21.04.2025 அன்று காலமானார்.
இந்நிலையில் புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சிஸ்டின் தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து உற்சாகமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வரவேற்று வருகின்றனர். புதிய போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Follow Us