அமெரிக்க அதிபரை கொல்ல முயற்சி; கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்

white house night security gate lorry incident investigation shock enquiry

அமெரிக்காவில்வெள்ளை மாளிகைஅமைந்திருக்கும் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் லாரிஒன்று நுழைந்தது. இந்நிலையில் வெள்ளை மாளிகையின் நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு தடுப்பு மீது லாரி இரண்டு முறை மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்லாரியை ஓட்டி வந்த நபரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ஹிட்லரின்நஜிப் கொடியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில்,இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா (வயது 19). இவர் ஜெயிண்ட் லூயிஸ் புறநகர் பகுதியில் உள்ள மிசூரியில் உள்ள செஸ்டர்பீல்டு என்ற இடத்தைச் சேர்ந்தவர். லாரியை வாடகைக்கு எடுத்து வந்து வெள்ளை மாளிகையின் தடுப்புகளைத்தாக்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனைகொன்றுவிட்டுஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வந்ததாகவும், தனது வழியில் யாரும் குறுக்கே வந்தாலும் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவேன். கடந்த 6 மாதங்களாகஜோ பைடனை கொலை செய்யத்திட்டமிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரின் வாக்குமூலத்தைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு பிரிவின் கீழ் போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகிறது.

America police whitehouse
இதையும் படியுங்கள்
Subscribe