whatsapp

பிரபலமான தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப், படிப்படியாக பழைய மொபைல் ஃபோன்களுக்கு தனது சேவையை வழங்குவதைநிறுத்திவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் நவம்பர் ஒன்றாம் தேதி முதல், 4.0.3 அல்லது அதைவிட குறைவான இயங்குதளம் கொண்ட மொபைல் ஃபோன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

அதேபோல், 9 அல்லது அதற்கு குறைவான ஐ.ஓ.எஸ்களைக் கொண்ட ஆப்பிள் ஐ-போன்களிலும்நவம்பர் ஒன்று முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என அந்தநிறுவனம் அறிவித்துள்ளது. இதனால்ஐ-போன் எஸ்.இ., ஐ-போன் 6 எஸ், ஐ-போன் 6 எஸ் பிளஸ் ஆகியவற்றில் இனி வாட்ஸ்அப் செயலி இயங்காது.

Advertisment

பயனர்களால் தங்களதுமொபைல் ஃபோனின் இயங்குதளத்தை (operating system) அப்கிரேட் செய்ய முடிந்தால், அவர்களால்வாட்ஸ்அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.