அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க செயலியான வாட்ஸ் அப் , தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக உள்ளது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்திவரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் தன்னுடைய சேவையை வாட்ஸ்அப் மேம்படுத்திவருகிறது. அந்த வகையில், ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் புதிய வசதியை அடுத்ததாக வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது. விரைவில் இந்தப் புதிய வசதி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.