whatsapp

Advertisment

அயர்லாந்து நாடு, வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 900 கோடியாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு தனியுரிமை விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எவ்வாறு பேஸ்புக்கோடுஅந்த தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்குத்தெரிவிக்க தவறியதால் வாட்ஸ்அப்பிற்குஇந்த அபராதம் விதிக்கப்படுவதாக அயர்லாந்தின் தரவுகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு வருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.