வாட்ஸ் ஆப் தனது ஆப்-ல் புதிதாக, குரூப் கால் செய்துகொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த குரூப் கால் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ கால் என வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப பேசிகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி புதிதாக அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் ஆப்-ல் மட்டுமே பயன்படுத்தப்படமுடியும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எப்போதும் போல் ஒருவருக்கு கால் செய்துவிட்டு அவர்கள் உங்கள் அழைப்பை எடுத்த பின்னர், உங்கள் திரையின் வலது பக்க மேல் மூலையில் மற்றோரு அழைப்பை இணைக்கும் ஆப்ஷன் காண்பிக்கும். அதன் மூலம் வேறு ஒரு நபரை இணைக்கலாம் இதுபோல் மொத்தம், அழைப்பு விடுத்தவர் உட்பட நான்கு பேர் வரை பேசலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.