Advertisment

இந்தியா என்றால் என்ன..? - கூகுளில் தேடிய அமெரிக்கர்கள்!

இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்த டிரம்ப் மற்றும் மெலனியா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அதன்பின் இரண்டாம் நாளான இன்று ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் ட்ரம்ப் மற்றும் மெலனியா ஆகியோரை வரவேற்றனர்.

Advertisment

பின்னர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து ட்ரம்ப் மற்றும் மெலனியா இருவரும் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ட்ரம்பின் வருகை கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வரும் நிலையில் அமெரிக்கர்களில் பெரும்பாலானவர்கள் கூகுளில் இந்தியா குறித்து தேடியுள்ளார்கள். அதில் அதிகம் பேர் இந்தியா என்றால் என்ன என்ற கேள்வியை கூகுளில் தேடியுள்ளார்கள்.

Advertisment
google
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe