What did the UN do in the war against Corona? -Modi question

Advertisment

ஐநா பொதுச்சபையில், பிரதமர் மோடிமுன்கூட்டியே பேசி பதிவு செய்யப்பட்ட உரை ஒளிபரப்பப்பட்டது.

அந்த உரையில் அவர் பேசியதாவது, ஐ.நா.வின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஐநா தொடங்கிய போது இருந்ததைவிட இன்றைய உலகம் முற்றிலும் மாறுபட்ட காலத்திற்கு மாறிவிட்டது. கால மாற்றத்திற்கு ஏற்பஐ.நா.வின்செயல்முறைகளை மாற்ற வேண்டியுள்ளது என்றார்.

மேலும், கரோனாவிற்கு எதிரான போரில் ஐ.நா.வின் பங்கு என்ன எனக் கேள்வி எழுப்பிய மோடி,130 கோடி இந்தியர்களுடையகருத்துகளின்பிரதிபலிப்பாக இந்த சபைக்கு நான் வந்திருக்கிறேன். ஐநா சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.உலக அமைதிக்குப் பயங்கரவாதம் என்பது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.