Skip to main content

இந்தியாவிலிருந்து மேலுமொரு சி.இ.ஓ... பிரபல அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு...

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

உலக அளவில் பிரபலமான பல நிறுவனங்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பல உயர் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா, சாந்தனு நாராயண் உள்ளிட்ட பல இந்தியர்கள் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் ஐ.பி.எம் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக இந்தியரான அரவிந்த் கிருஷ்ணா அறிவிக்கப்பட்ட சூழலில் மேலுமொரு அமெரிக்க நிறுவனத்திற்கு இந்தியர் ஒருவர் சி.இ.ஓ வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

WeWork appoints Indian American Sandeep Mathrani as new CEO

 

 

அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்படும் 'வீ ஒர்க்' ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான சந்தீப் மத்ராணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் உலகம் முழுவதும் பல பில்லியன் டாலர்கள் சம்பாதித்த இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சந்தீப் மத்ராணி இதற்கு முன்பு பல முன்னணி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஓ நியமனம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Kilambakkam Bus Station Appoints CEO

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலரை நியமித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், “சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வரும் ஜெ. பார்த்திபன், கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சிஇஓ பதவிக்கு விண்ணப்பம்

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

Application for the post of CEO of Tamil Nadu Mercantile Bank

 

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வங்கிக் கணக்கில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியிலிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இதனையடுத்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதே சமயம் இவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்திருந்தது  நிதியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் காலியாக உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பணியிடத்தை நிரப்ப அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பதவிக்கு தகுதியுள்ளவர்கள் www.tmbnet.in./tmbcareers என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.