Website Celebrity Fulfilled Challenges

Advertisment

கடந்த 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா வென்றால், கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அப்போது பரபரப்பை ஏற்படுத்தினார், கவர்ச்சி நடிகை பூனம்பாண்டே. இதுபோன்ற ஒருசர்ச்சையை தற்போது ஏற்படுத்தியிருக்கிறார், கச்சேரி கலைஞரான ஆலியா வைல்டர்மேன் என்ற வலைத்தள பிரபலம்.அவரது ‘சவாலான செய்கை’ தற்போது வைரலாகி வருகிறது.

அப்படியென்ன சவால்விட்டார் ஆலியா வைல்டர்மேன்?

‘ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதலில், பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்தினால், என்னுடைய காதலன் என்னை அடிக்கும் வீடியோவையும், என்னுடைய நிர்வாண போட்டோவையும் வெளியிடுவேன்’ என்று பதிவிட்டிருந்தார் ட்விட்டரில். முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழக்க, நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டார் ஆலியா. இதனைப் பகிர்ந்தபோது, ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் தோற்றால், காதலனுடன் மிக நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன்’ என்று வாக்குறுதி அளித்தார்.

தற்போது ‘இரண்டு வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டேன்..’ என்று வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற சவால்களும் வாக்குறுதிகளும் என்ன ரகமோ?