Advertisment

அமெரிக்காவை மொத்தமாக அழித்துவிடுவோம் -ஈரான் பகிரங்க மிரட்டல்!

america

Advertisment

ஈரானை அமெரிக்கா தக்க நினைத்தால் அமெரிக்காவில் இருக்கும் அனைத்தையும் அழித்து வீழ்த்திவிடுவோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விட்டுள்ளது.

ஈரான் உடன் செய்து கொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா விலகியதிலிருந்துஈரான் மீது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை செலுத்திவருகிறது அமெரிக்கா. இதற்கு ஈரானும் அமெரிக்காவிற்கு பதிலடடி கொடுத்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை நிலவி வந்த சூழலில்

ஈரானில் நேற்று நடந்த நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் அதிபர் ஹசன் ரூஹானி அமெரிக்காவை கடுமையாக எச்சரித்து பேசினார். இதனால் இரு நாடுகளுக்கான இடையேயானபதற்ற நிலை இன்னும் அதிகரித்தது.

Advertisment

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ''இனி எந்த மிரட்டலையும் முன் வைக்கக்கூடாது அப்படி வைத்தால் நீங்கள் வரலாற்றில் இதுவரை சந்திக்க முடியாத பேரழிவை சந்திக்க நேரிடும். அதிக நாட்கள் உங்கள் மிரட்டல்களை அமெரிக்கா பொறுத்திருக்காது'' என குறிப்பிட்டுருந்தார்.

இந்நிலையில் டிரம்பின் சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஈரான் சிறப்புப்படை கமாண்டோ காசிம் சோலிமனி'' அமெரிக்கா எங்களை தாக்க நினைத்தால் அமெரிக்காவில் இருக்கும் அனைத்தயும் அழித்து விடுவோம்'' என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

அதேபோல் ''டாஸ்னிம்'' என்ற ஈரான் பத்திரிகை இந்த சம்பவத்தை குறிப்பிடுகையில் '' டிரம்ப் போரை துவக்கி வைத்தால் இஸ்லாமிய பேரரசு போரை முடித்துவைக்கும் என கமாண்டோ காசிம் சோலிமனி சபதமேற்றுள்ளார்'' என செய்தி வெளியிட்டுள்ளது.

Donad trump iran America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe