ADVERTISEMENT

’பழைய சரித்திரத்திற்கு கோவை திரும்பி விடக்கூடாது’ - சி.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

06:22 PM Mar 22, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மாநில அரசை குறை சொல்வதை போல தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலையை மாநில அரசு எடுக்க வேண்டும் என்பதற்காக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் ரத யாத்திரை பல இடங்களுக்கு சென்றும் தமிழகத்திற்கு வந்தால் பிரச்னை வரும் என்று சொல்வதன் மூலம் மதவாத சக்திகள் பின்னால் திமுக இருப்பதை காண்பிக்கிறது எனவும் மத்திய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ADVERTISEMENT

கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்திற்கு வந்து பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கயிறு வாரிய தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணன், ’’கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் கடந்த காலங்கள் சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது எனவும் எத்தகைய தவறுகளை செய்ய ஆரம்பித்தாலும் காவல்துறையினரின் நடவடிக்கை இல்லாத வண்ணம் பிற அரசியல் கட்சிகள் பார்த்துக்கொள்ளும் என பாதுகாப்பு உணர்வை தீவிரவாதிகள் பெற்றிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் காவல்துறையினர் புலனாய்வை முடக்கிவிட்டு, இதுபோன்று செய்ய திட்டமிட்டிருப்பவர்களை கூட கைது செய்ய வேண்டும் என கூறிய அவர், திருமா, வைகோ, ஸ்டாலின் ஆதரித்தாலும் வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக பழைய சரித்திரத்திற்கு கோவை திரும்பி விடக்கூடாது என கூறிய அவர், ரத யாத்திரம் பல இடங்களுக்கு சென்றும் தமிழகத்திற்கு வந்தால் பிரச்னை வரும் என்று சொல்வதன் மூலம் மதவாத சக்திகள் பின்னால் திமுக இருப்பதை காண்பிப்பதாகவும், இதனால் அடிச்சுவடு இல்லாமல் அவர்கள் போய்விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

வன்முறை யார் செய்தாலும் தவறு தான். நடுநிலையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அரசு ஒத்துழைப்பு தான் உள்ளது. அரசியல் ஒத்துழைப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மாநில அரசை குறை சொல்வதை போல தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலையை மாநில அரசு எடுக்க வேண்டும் என்பதற்காக திமுக, அதன் கூட்டணி கட்சிகள் நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT