Warrant for Adani Court order

பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Advertisment

அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 -24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அதாவது இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கவுதம் அதானி மீது புகார் எழுந்தது. இதில் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் அதானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற தொழிலதிபர் அதானி லஞ்சம் தர சம்மதித்துள்ளார் என்ற பரபரப்பு கருத்தை நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுக்க முன்வந்த புகாரில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.