Advertisment

"உக்ரைன் மீதான போர் அறிவில்லாத்தனமானது"- காணொளியை வெளியிட்ட நடிகர் அர்னால்ட்!

publive-image

Advertisment

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ரஷ்யாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ரஷ்ய படைகளுக்கும், ரஷ்ய மக்களுக்கும் நடிகர் அர்னால்ட் ஒன்பது நிமிடங்கள் கொண்ட காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரைன் மீதான போர் அறிவில்லாத்தனமானது. இந்த போரில் ரஷ்யாவை எதிர்க்கும் உக்ரைன் வீரர்களேபுதிய ஹீரோக்கள். ரஷ்யா தான் போரைத் தொடங்கியது; உக்ரைன் அல்ல. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் குடியிருப்புகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 67 வயதான நடிகை ஒருவர் உயிரிழந்தார். இவர் சிறந்த நடிகைக்கான உக்ரைன் நாட்டின் உயர்ந்த விருதைப் பெற்றுள்ளார். சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Russia Ukraine video
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe