Skip to main content

'இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க'-பாஜகவிற்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'Vote for the irattai ilai' - OPS that shocked the BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

இந்த தேர்தலில் தேர்தல் தேதிகள் அறிவித்து விட்ட பிறகும் கூட்டணி குறித்த குழப்பங்கள் சில அரசியல் கட்சிகளில் நிலவியது. பாஜக கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அண்மையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சைக்கிள் சின்னத்திற்கு பதிலாக கை சின்னத்திற்கு வாக்கு கேட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

அதேபோல தற்போது ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பலாப்பழம் சின்னத்திற்கு பதிலாக பழக்கதோஷத்தில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 'இரட்டை இலைக்கு' என சொல்ல வந்த ஓபிஎஸ், உடனடியாக திருத்திக் கொண்டு பலாப்பழம் என்றார். ஏற்கனவே ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் ஐந்து பேர் ஓபிஎஸ் என்ற பெயரில் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

சார்ந்த செய்திகள்

Next Story

கணவன் முகமூடியுடன் களத்தில் இறங்கிய மனைவி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The wife entered the field with her husband masked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தன் மனைவி, அதிமுக கட்சியினருடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடைய கணவர் தமிழ்வேந்தனின் முகமூடியை அணிந்தபடி அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''அதிமுகவில் ஒரு புதிய வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். ஒரு இளைஞருக்கு வேட்பாளராக வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அவருக்கு 34 வயது தான் ஆகிறது. அவர் என்னுடைய கணவர் என்பதை விடவும், இளைஞர் ஒருத்தர் தேர்தலில் நிற்கிறார் என்பதே முக்கியம்.
 

அவங்களோட வாக்குறுதிகள் இன்னும் எல்லாருக்கும் போய் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கிறேன். போதைப்பொருளை ஒழிப்பதும், கல்வியை அனைவருக்கும் சமமாக்குவது என்பதுதான் அவருடைய இலக்காக இருக்கிறது. அவருக்கு சப்போர்ட்டாக இங்கு நான் வந்து இருக்கேன். மக்களுக்கு நல்லாவே தெரியும் ஆட்சியில் இருக்கின்ற பாஜகவாக இருக்கட்டும் எதிர்க்கட்சியாக இருக்கட்டும் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. அவர்களுக்கு எதுக்கு இன்னொரு வாய்ப்பு. ஆட்சிக்கு வரும்போது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை. அதனால் தான் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியாக இருக்கட்டும் அன்பழகனாக இருக்கட்டும் அவர்கள் ஒரு நல்ல வாய்ப்பை எனது கணவருக்கு கொடுத்துள்ளார்கள்''என்றார்.

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.