Skip to main content

மூன்று நிறுவனங்களும் ஒன்றாக இணைகிறது...!

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் மூன்று கிளை நிறுவனங்களை நடத்திவருகிறது.

 

volkswagen

 

இந்திய நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஃபோக்ஸ்வேகன் குரூப் சேல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து இயக்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமையான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஸ்கோடா நிறுவனத்தினால் தொடங்கப்பட்டுள்ள ‘இந்தியா 2.0’ என்ற மறுசீரமைப்பு நடவடிக்கை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லேம்போர்கினி உட்பட ஆயிரக்கணக்கான சொகுசு கார்களுடன் பற்றி எரியும் கப்பல்!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

felicity ace

 

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சொகுசு கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றிச் சென்ற ஃபெலிசிட்டி ஏஸ் என்ற சரக்கு கப்பலில், தீப்பற்றி எரிந்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே கடந்த புதன்கிழமையன்று மதியம் சென்றுகொண்டிருந்தபோது இக்கப்பலில் தீப்பற்றியுள்ளது.

 

இதனைதொடந்து கப்பலில் இருந்த 22 பேர் போர்த்துகீசிய கடற்படை மற்றும் விமானப்படை உதவியுடன் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் கப்பல் பற்றி எரியும் நிலையிலேயே கடலில் அலைந்துகொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

தீ விபத்து ஏற்பட்டுள்ள கப்பலில் 3,965 ஃபோக்ஸ்வேகன் குழும கார்கள் இருந்ததாகவும், அதில் ஃபோர்ஷே, அவ்டி மற்றும் லேம்போர்கினி கார்களும் அடங்கும் என அமெரிக்காவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இ-மெயில் ஒன்று தெரிவிப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.

 

ஏற்கனவே கிராண்டே அமெரிக்கா என்ற கப்பலில் 2019 ஆம் ஆண்டு தீப்பிடித்தபோது, அந்த கப்பலோடு அதில் இருந்த 2000 சொகுசு கார்கள் கடலில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

பசுமை தீர்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு... - ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

 

volkswagen

 

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மை கொண்ட உபகரணத்தை தனது டீசல் கார்களில் பொருத்திய விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய செய்தி தொடர்பாளர், தேசிய பசுமை தீர்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.