பல வருடங்களாக உள்நாட்டு போரில் அவதிப்பட்டு வரும் சிரியாவில், கடந்த இரண்டு வாரங்களாக கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இட்லிப் நகரை மீட்பதற்காக சிரியா ஆர்மியும் ரஷ்யாவும் கூட்டாக இணைந்து வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பலரும் தங்க வீடின்றி நகரை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சாராகுஃப் பகுதியிலிருந்து உள்நாட்டுப் போர் காரணமாக வலுக்கட்டாயமாக பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் அப்துல்லா முகமத் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வெளியேற்றப்பட்டதால் தற்போது தன் நண்பரின் இல்லம் இருக்கும் சர்மதா பகுதியில் வசித்து வருகிறார்கள்.
அவர்கள் தங்கியிருக்கும் பகுதியின் அருகே சிரிய அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் வான்வெளி சண்டை நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெடிகுண்டு சத்தங்கள் சகஜமான ஒன்றாக மாறியுள்ளது. அந்த பகுதிகளில் வாழும் குழந்தைகள் இதுபோன்ற சத்தத்தால் பெரிதும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/PTjvhHLdC2M.jpg?itok=Ray2ttDq","video_url":"
இந்நிலையில் அப்துல்லா தனது நான்கு வயது மகளுக்கு மேலிருந்து கீழே விழுகும் வெடிகுண்டு சத்தத்தை கேட்டால் சிரிக்கும்படி கற்றுக்கொடுத்திருக்கிறார். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் விமானமா? வெடிகுண்டா? என்று தனது மகளிடம் அவர் கேட்க, அதற்கு மகள் செல்வா வெடிகுண்டு என்று சொன்னவுடன் குண்டு சத்தம் கேட்கிறது. உடனே அப்பாவும் மகளும் வாய்விட்டு சிரிக்கிறார்கள். இந்த காட்சி வீடியோவை காண்பவர் மனதை வருடுகிறது. உலகம் முழுவதும் வைரலாகும் இந்த வீடியோவை பார்த்து பலரும் ஆபத்தான நிலையிலும் தன் மகளை சிரிக்க வைக்கும் தந்தை பாராட்டி வருகிறார்கள். பெரும்பாலானோர் ஆதிக்கம் செலுத்துவதற்காக அப்பாவி மக்களை இறையாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அதிகார வர்க்க நாடுகளை கண்டித்து, மக்களுக்காக வருந்துகின்றனர்.