இந்தோனேஷியாவில் நெடுஞ்சாலைஒன்றில்போக்குவரத்து காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியேஒரு சிறுவன் தன்னுடைய குட்டி பைக்கில் தங்கையுடன் வேகமாக வந்துள்ளான். இதைப் பார்த்த போலீசார் அந்த குட்டி பைக்கை நிறுத்தி அவனிடம் விசாரித்தபோது அழத்தொடங்கிவிட்டான் அந்த சிறுவன்.
இதனால் அந்த சிறுவனின் அழுகையை நிறுத்த போலீசார் முயன்றும், அவன் அழுதுகொண்டே இருந்ததால் இறுதியில் அந்த சிறுவனைசமதானப்படுத்தி வீடுவரை சென்று பெற்றோர்களிடம் அறிவுரைகூறி விட்டுவந்தனர். அந்தவீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.