வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் தோன்றியது. தென் தமிழகம், கொச்சின், அகமதாபாத், புவனேஸ்வர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தோன்றியது. தமிழகத்தில் ஊட்டியில் அதிக நேரம் இந்த கிரகணம் தெரிந்தது.

Advertisment

gd

இந்நிலையில் இந்த அதிசய கிரகணம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, இந்த அரிய நிகழ்வை புகைப்பட கலைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் புகைப்படம் எடுத்துள்ளார். ஜோஷ்வா கிரிப்ஸ் என்ற அந்த புகைப்பட கலைஞர், அரேபிய பாலைவனத்தில் ஒட்டகத்தினை மையமாக வைத்து சூரிய கிரகணம் நடக்கும் நிகழ்வை புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.