மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்! ( வீடியோ)

மூளையில் அறுவைசிகிச்சை செய்யும் போது நோயாளி ஒருவர் வயலின் வாசித்த சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டாக்மர் டர்னர் என்ற 50 வயது பெண்ணுக்கு மூளையில் சிறிய அளவில் கட்டி ஒன்று இருந்துள்ளது. இதற்காக அவருக்கு லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கடந்த இரண்டு நாட்களாக தயாரான அந்த பெண், மருத்துவர்களிடம் தனக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது தான் வயலின் வாசிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களும் அவரின் கோரிக்கையை ஏற்றுள்ளார்கள். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆடையை அணிந்துகொண்டு அறுவை சிகிச்சையின் போது அவர் வயலின் வாசித்துள்ளார். தற்போது இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது எவ்வாறு சாத்தியம் நெட்டிசன் ஆச்சரியமடைந்து வருகிறார்கள்.

Doctor
இதையும் படியுங்கள்
Subscribe