Advertisment

சிங்கள - முஸ்லீம் மோதல் எதிரொலி! - இலங்கை கண்டியில் ஊரடங்கு உத்தரவு!

இலங்கை கண்டி மாவட்டத்தில் சிங்கள மற்றும் முஸ்லீம் இனத்தவரிடையே தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

Srilanka

கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இலங்கையில் உள்ள அம்பாறை பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முஸ்லீம்கள்நடத்திய தாக்குதலில் சிங்கள இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

Advertisment

இந்த மரணம் மேலும் அசாதாரண சூழலை உருவாக்க, இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் அனைத்தையும் சிங்கள இனத்தவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் கண்டி மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

தற்போது, அந்தப் பகுதியில் நிலைமையைச் சீராக்க, தொடர்ந்து 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கு சிறப்பு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Violence srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe