fghfghhgf

Advertisment

கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பி சென்ற வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்ற கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி தலைமைநீதிபதியின் உத்தரவு உள்துறை செயலருக்கு அனுப்பப்பட்டு அவர் அதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமைச்சர் சாஜித் ஜாவித் பலகட்ட பரிசீலனைக்கு பிறகு இதற்க்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனை எதிர்த்து வரும் 14 ஆம் தேதிக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஜய்மல்லையா தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறும்போது, 'கடந்த டிசம்பர் 10-ம் தேதி வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக நான் மேல்முறையீடு செய்ய உள்ளேன். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைப் பார்த்தபின் மேல்முறையீடு பற்றி பரிசீலிக்க இருந்தேன். இப்போது மேல்முறையீடு செய்யவது என முடிவு செய்துவிட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.