/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ghl_3.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 31 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 31,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1584956668553-0'); });
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1584957472633-0'); });
அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வல்லரசு நாடுகள் பலவற்றில் கரோனா பாதிப்பு என்பது பல லட்சக்கணக்கில் இருந்து வருகின்றது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் காரணமாக பல்வேறு நாடுகளில் உயிரிழந்து வருகிறார்கள். அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்த நிலையில், 10 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள வியட்நாம் நாட்டில் கரோனா பாதிப்புகாரணமாக இதுவரை ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 270 பேர் அந்த நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 200 மேற்பட்ட நபர்கள் அதில் இருந்து குணமாகி திரும்பியுள்ளனர். இந்த தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்து வல்லரசு நாடுகளுக்கெல்லாம் வியட்நாம் முன்னோடியாக இருந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)