Advertisment

புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞர்... வைரலாகும் வீடியோ - காரணம் இதுதான்!

புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் இளைஞர் ஒருவர் கடலில் தவறிவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலத்தில் இளைஞர் புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக வந்தஅதிநவீன கேமராக்களின்வருகை, அதனை மேலும் ஊக்கப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் இளைஞர் ஒருவர் நவீனத்துவமாக புகைப்படம் எடுக்க எண்ணி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

Advertisment

தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் நடுகடலில் கப்பலில் நின்று புகைப்படம் எடுத்து வருகிறார். கப்பல் கம்பியின் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுக்கும் அவர், மேலும்புகைப்படம் எடுக்கும் நோக்கில் பின்புறம் செல்கிறார். இதில் நிலைதடுமாறிய அவர் கடலில் தவறி விழுந்தார். தவறி விழுந்த அந்த சமயத்திலும் தன்னுடைய கேமராவை காப்பாற்ற அவர் போராடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Photography
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe