Skip to main content

புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞர்... வைரலாகும் வீடியோ - காரணம் இதுதான்!

Published on 14/04/2020 | Edited on 14/04/2020

புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் இளைஞர் ஒருவர் கடலில் தவறிவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலத்தில் இளைஞர் புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக வந்த அதிநவீன கேமராக்களின் வருகை, அதனை மேலும் ஊக்கப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் இளைஞர் ஒருவர் நவீனத்துவமாக புகைப்படம் எடுக்க எண்ணி சிக்கலில் மாட்டிக்கொண்டார்.


 


தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் நடுகடலில் கப்பலில் நின்று புகைப்படம் எடுத்து வருகிறார். கப்பல் கம்பியின் ஓரத்தில் நின்று புகைப்படம் எடுக்கும் அவர், மேலும் புகைப்படம் எடுக்கும் நோக்கில் பின்புறம் செல்கிறார். இதில் நிலைதடுமாறிய அவர் கடலில் தவறி விழுந்தார். தவறி விழுந்த அந்த சமயத்திலும் தன்னுடைய கேமராவை காப்பாற்ற அவர் போராடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃப்ரீலான்ஸ் போட்டோகிராஃபர் கொலை; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Freelance photographer incident; Shocked by the police investigation

வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க வேண்டும் என போட்டோகிராபரை ஆர்டர் செய்த இளைஞர்கள், போட்டோ எடுக்க வந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்து அவரிடமிருந்து கேமரா உள்ளிட்ட உபகரணங்களை திருடிச் சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்குமார் (23). புகைப்படக் கலைஞராக இருக்கும் சாய்குமார் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு போட்டோகிராபி செய்து கொடுக்கும் ஃப்ரீலான்சராக பணியாற்றி வந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார்.

Freelance photographer incident; Shocked by the police investigation

இந்தநிலையில், சாய்குமாரை தொடர்பு கொண்ட இளைஞர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு போட்டோ எடுத்து தர வேண்டும் என அழைத்துள்ளனர். கோணசீமா மாவட்டம் ரவுலாபாலம் பகுதியில் நிகழ்ச்சி நடைபெறுவதாக சாய்குமாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி சாய்குமார் விலையுயர்ந்த கேமரா, புகைப்பட உபகரணங்களை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் சாய்குமார் வீடு திரும்பாததால் சாய்குமார் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சாய்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து விலையுயர்ந்த கேமராக்களை பறித்த கும்பல் அவரை மணல் பரப்பில் கொலை செய்து புதைத்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

''உலக அவலங்களை காமெராவில் சிறைப்படுத்திய கலைஞன்''

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் நடக்கும் மோதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்  கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடைய மறைவுக்கு ஐநா சபை, அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் செய்திகள் வெளியாகிவருகின்றன.

 

அமெரிக்கப் படைகள் திரும்பிய பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவிவருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளரான மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் தொடர்ச்சியாக செய்திகளைச் சேகரித்து வெளியிட்டுவந்தார். இந்நிலையில், ராணுவத்தினருடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். 

 

அவருடைய பூதவுடல் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. அவரது உடலை இந்தியா கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டுவருவதாக மத்திய அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. டேனிஷ் சித்திக்கின் மறைவுக்கு ஐநா சபையின் பொதுச் செயலாளர், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும், சக செய்தியாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்

 

உலக அளவில் புகைப்பட கலைஞருக்கான உச்சபட்ச விருதான 'புலிட்சர்' விருதை தனது 38வது வயதிலேயே பெற்றவர் டேனிஷ் சித்திக். மியான்மரில் ரோஹிங்கியா அகதிகள் அனுபவித்த சோகம், முதல் கரோனா அலை நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்கள், அதேபோல் அண்மையில் கரோனா இரண்டாம் அலை தொடக்கத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியபோது இருந்த சூழ்நிலைகள், அதற்கு முன்பாக சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற கலவரக் காட்சிகள், நேபாள நிலநடுக்கத்தில் சிக்கித் தவித்த மக்கள் என அவர் எடுத்த ஒவ்வொரு புகைப்படமும் இன்றுவரை அந்தத் துயரங்களின், மாறா வடுவின் வெளிப்பாடாக இருக்கின்றன.

 

மியான்மரில் ரோஹிங்கியா அகதிகள் கையாளப்பட்ட முறை, அவர்கள் அனுபவித்த இன்னல்கள் குறித்து அவர் எடுத்த புகைப்படங்களே அவருக்கு உலக விருதான 'புலிட்சர்' விருதைக் கொண்டுவந்து சேர்த்தது. இறுதிமுதல் தவிப்பு, சிலிர்ப்பு, சோகம், பதைபதைப்பு என அத்தனையையும் காமெராவில் சிறைப்படுத்திய அந்த அற்புத கலைஞனை இழந்து நிற்கிறது இந்த மண்.