hyjn

Advertisment

அழகுக்காக பெண்கள் தற்பொழுது பலவகையான விதவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். அப்படி அழகுசாதன பொருள் பயன்பாட்டின் உச்சத்தையே தொட்டிருக்கிறார் பிரபல பாடகி விக்டோரியா பெக்கம். பிரிட்டனை சேர்ந்த பிரபல பாடகியும், கால்பந்து வீரர் டேவிட் பெக்கமின் மனைவியுமான இவர் தனது ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மாய்சரைஸர் கிரீமையே முகத்திற்கு பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'என்னுடைய ரத்தத்தில் இருந்து செல்களைப் பிரித்து அதன்மூலம் இந்த மாய்சரைஸர் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அலர்ஜியைப் போக்க கூடியது. செல்களை மீண்டும் புதுப்பிக்கும் திறன் கொண்டது. பெர்லினில் உள்ள மிகப்பெரிய மருத்துவர் ஒருவரால் உருவாக்கப்பட்ட இந்த மாய்சரைஸரை தயாரிக்க ரூ.1 லட்சத்து 11 ஆயிரம்செலவானது என அதில் குறிப்பிட்டுள்ளார்.