Skip to main content

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம்!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

velraj.jpg

 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பார். தற்போது வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். இதுவரை துணைவேந்தராக இருந்த சூரப்பா ஓய்வுபெற்றதையடுத்து, இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக.9-ல் அண்ணா பல்கலை. துணைவேந்தர் நேர்காணல்!

Published on 01/08/2021 | Edited on 01/08/2021

 

anna university vice chancellor interview held on aug 9th

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஆகஸ்ட் 9- ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 10 பேர் நேர்முகத் தேர்வுக்கு இறுதி செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 5 பேர், ஐஐடி பேராசிரியர்கள் இருவர் உள்ளிட்ட 10 பேருக்கு நேர்காணல் நடைபெறுகிறது. நேர்காணலின் முடிவில் தகுதியான மூன்று பேரை இறுதிச் செய்து அவர்களின் பெயரை ஆளுநரிடம் தேடல் குழு வழங்கும். தேடல் குழு அளித்த பட்டியலில் இருந்து துணைவேந்தராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

சூரப்பாவுக்கு அடுத்தது யார்? - குழு தலைவர் நியமனம்!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

anna university vice chancellor governor order

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் குழு தலைவரை நியமித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2020ஆம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்வு செய்யும் குழு தலைவராக இருந்தவர் ஜெகதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஜெகதீஷ் தலைமையிலான குழு, துணைவேந்தர் பதவிக்கு மூவரை தேர்வு செய்து ஆளுநருக்குப் பரிந்துரை அளிக்கும். குழு பரிந்துரைத்த மூவரில் ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேர்வு செய்து ஆளுநர் அறிவிப்பார்.   

 

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள சூரப்பாவின் பதவிக் காலம் ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிவடைவதால், புதிய துணை வேந்தரைத் தேர்வு செய்ய குழு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.