Skip to main content

ஈழத்தமிழருக்கான தீர்வு ! ஐ.நா.வில் குரல் கொடுத்த வேல்முருகன்.

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்றுவரும் 42 - வது கூட்டத்தில் பங்கேற்கவும், மற்றும் உலக தமிழர்களுடனான பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும் கடந்த 22 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு ஒரு வார கால  சுற்றுப்பயணமாக ஜெனீவா சென்றுள்ளார். 
 

velmurugan in geneva

 

ஜெனீவா சென்றுள்ள அவர், நேற்று (26.09.2019) மாலை ஐ.நா.வின் பிரதான அவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும், அங்கு ஐநாவின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இரண்டு அமர்வுகளில் பங்கேற்று  உரையாற்றினார் வேல்முருகன்.


அந்த உரையில் அவர் கூறியதாவது "1948 ஆம் ஆண்டு பிரிட்டானியர்கள் இலங்கை விட்டு சென்றவுடன் சிங்களர்களின் கைவசம் அந்நாடு சென்றது. 1956 ஆம் ஆண்டு மொழியுரிமை, கல்வியுரிமை ஆகியவை பறிக்கப்பட்டுவிட்டன. 1976 ஆம் ஆண்டு தமிழீழம் என்ற தனி நாடு வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 1983 ஆம் ஆண்டு 3000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ச்சியான போராட்டங்கள் வன்முறையால் ஒடுக்கப்பட்டதால் ஆயுத போராட்டம் எடுக்க வேண்டிய சூழலுக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். 2002 ஆம் ஆண்டு நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழர்கள் பகுதி தன்னாட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டது".


இவர் மேலும் பேசுகையில் "2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடந்த போரில் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமலும் ஆக்கப்பட்டனர். போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆனாலும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. இலங்கை ராணுவத்தால் பறிக்கப்பட்ட நிலங்கள் திருப்பி தரவில்லை. இதுபோன்று நிறைய மனித உரிமை மீறல் அந்நாட்டில் நடக்கிறது " என்றும் " ஒரு சர்வதேச விசாரணை இல்லாமல் தமிழருக்கான நீதி கிடைக்காது" என்று தன்னுடைய உரையில் கூறினார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.